Friday, 19 July 2013

"பள்ளி" வார்த்தை பற்றிய ஒரு விளக்கம்

தமிழ்'ல் பல இலக்கியங்களிலும்,வரலாறுகளிலும் பள்ளி என்ற வார்த்தை உயர்வையும் மேன்மையையும் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது, இன்றும் அவ்வாறு தன உள்ளது ..அதன் விளக்கத்தை இங்க காண்போம் .


பள்ளி என்பது உண்மையில் ஒரு சமண (புத்த) சமுதாய வார்த்தை ..சமண கோவில்கள் அனைத்தும் பள்ளி என்றே அழைக்கப்பட்டது ...தென் இந்தியாவில்  புத்த மதத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள் பல்லவர் வம்சம் தான் புத்த வர்மன், பொதி தர்மன் போன்ற மன்னர்கள் இதற்கு சாட்சி .

ஆகவே அவர்களின் (பல்லவர்களின்) வழிதோன்றல்கள் ஆகிய இன்றைய வன்னியர்க்கும் பள்ளியர் அல்லது பள்ளி சமுதாயம்  என்ற பெயர் வந்தது ..

அரசனின் நினைவிடத்தை (நடுகல்)  பள்ளிப்படை  என்றே அழைப்பார்கள்
(ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குடந்தை அருகே உள்ள
 பழையாறை'யில் உள்ளது)

=================================================================
பள்ளி என்ற சொல் இன்றும் உபயோகிகப்படும் இடங்கள்...
======================================================
1)பள்ளிக்கூடம்--> சங்கம் காலம் தொட்டு இன்று வரை கல்வி கற்பிக்க படும்        இடம் பள்ளி என்றே அழைக்கபடுகிறது

2)பள்ளிவாசல் -->இஸ்லாமியர்களின் கோவில்'கள் அனைத்தும் இன்று பள்ளிவாசல் என்றே அழைக்கபடுகிறது

3)பள்ளி அரை  ---->ஹிந்து ஆலயங்களில் பிரதான கடவுள் இருக்கும் அறை இன்றும் பள்ளியறை என்றே அழைக்கபடுகிறது

4)பள்ளி கொள்ளுதல் ---->ஆழந்த துயில்(தூக்கம் ) அல்லது தியானம் இருக்கும் நிலையை பள்ளி கொள்ளுதல் என்பார்கள்..

5)பள்ளி கொண்ட பெருமாள் ---> பெருமாள் சாய்ந்த கோணத்தில் படுத்திருப்பது போல காட்சி அளிப்பதை பள்ளி கொண்ட பெருமாள் என்று தான் அழைப்பார்கள் ...மற்ற பெருமாள் கோலத்தை விட இது தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது ....
==============================================================
பள்ளி என்ற பெயர் உடைய மற்ற சமுதயாங்கள்
===============================================================
1)இல்லத்து பிள்ளைமார் சமதாயத்தில் 5 இல்லங்கள் உள்ளது  அவற்றுள்
பள்ளி இல்லம் எனும் பிரிவே மிகவும் உயர்ந்தது

2)பள்ளி ரெட்டி ,பள்ளி காப்பு ,பள்ளி நாயர் போன்றவை மற்ற சமுதாயங்களில் உள்ள பள்ளி என்றுள்ள பிரிவுகள் ஆகும் 

Wednesday, 17 July 2013

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆண்ட பாளையங்களும் அவர்களின் பட்டங்களும் ...

1. பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப சோழனார்.
2. முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்)
3. அரியலூர் – மழவராயர்
4. உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.
5. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
6. கீழூர் - பாஷா நயினார்
7. சிவகிரி - பாண்டிய வன்னியனார்
8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைகண்டியத் தேவர்.
9.அளகாபுரி – ரெட்டைக்குடையார்
10. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
11. குன்ணத்தூர் – மழவராயர்
12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
13. பிராஞ்ச்சேரி - நயினார்
14. தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
15. நெடும்பூர் – வண்ணமுடையார்
16. கடம்பூர் – உடையார்
17.ஓமாம்புலியூர் – வண்ணமுடையார்
18. குண வாசல் – வண்ணமுடையார், உடையார்
19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
20. நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர்
21. கிளாங்காடு - சேதுவராயர்
22. கல்லை – நயினார்
23. நயினார் குப்பம் - காங்கேய நயினார்
24. திருக்கணங்கூர் - கச்சிராயர்
25. தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர்
26. ஆடூர் - நயினார்
27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
28. சோழங்குணம் – முதன்மையார்
29. வடக்குத்து - சமஷ்டியார்
30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
33.முடிகொண்ட நல்லூர் – உடையார்
34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
36. கு றிச்சி - உடையார்
37. செல்லப்பன் பேட்டை – சோழனார்
38. சோத்தமங்கலம் - வாண்டையார்
39. கோடாங்க்குடி – சம்புவராயர்
40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்
41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
42. இடைமணல் – நயினார்
43. சுவாமிமலை – தொண்டைமான்
44. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.
45. விளந்தை – வாண்டையார், கச்சிராயர்
46. பெண்ணாடாம் – கடந்தையார்
47. விடால் – நாயக்கர்
48. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
49. கருப்பூர் - மழவராயர்
50. கார்க்குடி – மழவராயர்

வன்னிய பாளையக்காரர் சிலர் இனைந்து எடுத்த அறிய புகைப்படம்

நுராண்டுகளுக்கு முன் உடையார்பாளையம் பாளையக்காரர், அரியலூர் மழவராயர், பிச்சாவரம் சோழனார், கடலங்குடி ஜமின், வடுககுடி ஜமீன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த அறிய புகைப்படம்

இடம் : உடையார்பாளையம் ஜமின் அரண்மனை

Monday, 15 July 2013

வன்னியர்களுக்கு உண்டான பட்டங்கும், உட்பிரிவுகளும் ..

பிரிவுகள்
வன்னியர், படையாட்சி, பள்ளி, கௌண்டர், நாயக்கர்/நாயகர், கண்டர், ரெட்டி(திருவள்ளுவர் மாவட்டம்)

பட்டங்கள்/விருதுகள்
காடுவெட்டியார்(pallavar), காடவராயர்(pallavar), சம்புவராயர், தொண்டைமான், மழவராயர், மலையமான், வாண்டையார், வல்லவராயர், பல்லவராயர், படையாண்டவர், பிள்ளை, முதலியார், தேவர், கண்டியதேவர், நாட்டார், நாயனார்,ராவுத்த மீண்ட நாயினார், கச்சிராயர்,கௌடா (tigaluru-karnataka), உடையார், காலிங்கராயர், சோழனார்(சோழர்), சோழகனார்(சோழர்), செம்பியனார்(சோழர்),பல்லவ நாயகர், ராயர், ராஜகாளியர், ராஜாளியார், கங்கன உடையார், வானத்திராயர், வானவர், கடாரம் காத்தவர், கம்புடையார், சுவாமி, சேரனார், பாண்டியனார், பரமேஸ்வரனார், உரையார், வருமாராயர், முப்பனார், வையவர், வேலி, தென்னவராயர், கண்டவராதித்தர், மானம் காத்த மழவராயர், வாலன்டையார், இறையவர், நீலாங்கரயார், அதியமான்,ஜெயங்கொண்டார், மாமுனைகாரர், கொண்டார், அன்னாலங்கார், ராவுதமீண்டார், காசிராயர், உலகுடையார், சாமந்தர், செட்டியார், மேச்த்ரி, பட்டவர்த்தி, பல்லவர், புலிகுத்தியார், மருந்கிர்பிரியர், முதன்மையார், வணங்காமுடியார், வன்னியனார், வீரமீண்டார், பாளையக்காரர், மந்திரியார், தொண்டனார், நன்மையார், விள்ளகொண்டார், சமுதிராயர், ஏன்தனர், உய்யக்கொண்டார், ஆவியார், இச்சதிரியர், நாயக்கர், இரட்டியர், ராஜா, காசுடையார், கடந்தையார், கனடியர், கொண்டீகர், காவுண்டர், சம்ச்க்ஷியார், சாமதியார், சேதுராயர், நீலாங்கராயர், பண்டாரத்தார், பல்லவராயர், பூபதி, மழவர், முனையதரையர், வர்மா, வில்லவர், மும்முடி சோழகனார், துரை, பூமி கொடையார், வாளோடு பிறந்தவர், வல்லமை உடையார், பாண்டியனார், உத்தம சோழகர், ஜெயபுளியார், ஏசிகர், வீரன்கரயார்,நீலம்பிரியர், கோட்டை உண்டார்,வல்லதிரயார், கட்டரியார், வில் விஜயனார் ,காங்கேயர், தொண்டமார், கலிங்கராயர், வன்னிய பிள்ளை, நாயகம்,....

Saturday, 13 July 2013

ராமேஸ்வரம் தொண்டி பகுதியில் வாழும் படையாட்சியும் , சோழர்களும், பாண்டிய மன்னனும் ...



தொண்டியில் வாழும் படையாட்சிகள் 

தொண்டி ராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை நகரம்.
தொண்டியின் வரலாறு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டன். இதை கேள்விபட்ட் இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான் . அவன் இறந்த இடம் இன்று சுந்தர பாண்டியன் பட்டினம் என்று அழைக்கபடுகிறது. இறுதியில் பாண்டியன் சோழர்களின் உதவியை நாடுகிறான். சோழன் தன ஒரு படையை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான். பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறான் இலங்கை மீண்டும் தன மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும் என்றான். சோழ மன்னனும் தன படையை காவலுக்கு வைத்து நாடு திரும்பினான் சோழ மன்னன். அந்த படை தன தொண்டியின் பூர்விக மக்களை இன்று உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கபடுகிரார்கள்.

ஆதாரம் 1)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)

கச்ச தீவு அந்தோனியார் ஆலயத்தை கட்டிய சீனீகுப்பன் படையாட்சி


சீனிகுப்பன் படையாச்சி

கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் ஆலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.இலங்கையில் இனகலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர்.

கச்ச தீவு பிரச்சனை 

 இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர். 2011ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆலயத்தை கட்டியது ஒரு வன்னியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

ஆதாரம் 1)http://www.dinamalar.com/news_detail.asp?id=705320&Print=1
                   2)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81

வணக்கம்

வணக்கம் இது வன்னியர்களின் வரலாற்று பெருமையை அரசியல் முக்கியத்துவத்தை வெளிபடுத்துவதற்கான ஒரு வலை பூ