Monday, 7 September 2015

வன்னியர் சங்கம் பற்றி சிறிய அனால் புதிய தகவல்
நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124 வன்னியர் சங்கம்
09-06-1889--ல் துவங்கப்பட்டது... சென்னையில்
வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ்
சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில்
அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது.. சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம்
- தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர்
பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு 01-06-1890
சென்னையில்
அய்யாசாமி பிள்ளை தலைமை 21-06-1891
சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை 05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர்
தனக்கோட்டிமுதலியார் தலைமை 25-01-1893
சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்
புதுவை சதாசிவவேல் தலைமை 17-061894
ஆற்காடு நவாபு தோட்டம் 17-061895 ஜெயராம வேல்
தலைமை 28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை 19-07-1896
ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார்
தலைமை 21-06-1897 குருசாமி ராயர்
தலைமை 26-06-1898 சென்னையில்
தனக்கோட்டிமுதலி
பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை 23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்
1900 இல்லை 1901 இல்லை 1902 ஆவணி மாதம்
அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை 03-081903
ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர்
தலைமை இதில் உடையார் ,முதலியார் ,நாயகர், நாயக்கர்,பிள்ளை மற்றும் கண்டர் ஆகிய பட்டங்கள்
உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே

நன்றி ஆனந்த் வாண்டையார் 

Sunday, 12 January 2014

சிதம்பரத்தில் வன்னியர் வேளாளர் யுத்தம்

சிதம்பரத்தில் வன்னியர் வேளாளர் யுத்தம் :

வலங்கை இடங்கை என்ற பிரிவு தென்னகத்தில் தோன்றியது .

""வேளாளர் , வடுகர் ஆகிய சில சாதியர்கள் ஒன்று சேர்ந்து தங்களை வலங்கையினர் என்று வைத்துகொண்டு , கம்மியர் முதலிய சில சாதிகளை எதிர்த்து அழிக்க தலைப்பட்டனர் . கம்மியர் முதலிய 9 சாதிகள் தங்களை இடங்கை என்று கூறி வலங்கையினரை எதிர்த்தனர் .......

வன்னியர்களும் பார்ப்பனர்களும் அக்கட்சிகளில் கலக்காமல் நடுநிலைமை வகித்தனர் .ஆனால் பலமுள்ள வலங்கை வகுப்பார்கள் இடங்கைலார்களை அழிக்க ஆரம்பித்த காலத்தில் , இடங்கை சாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வீரமும் ஆண்மையும் உள்ள வன்னியர்கள் வலங்கையாளர்களை அடக்கி , இடங்கையாளர்களை காப்பாற்றினர் .

இக்கலகம் நூறு வருடத்திற்கும் மேலாக நடந்தது . பலமுறை வலங்கையினர், வன்னியர்களால் படுகொலையடைந்தனர் .

"பரம்பரை விவசாய வகுப்பினராகிய வேளாளர்களுக்கு உதவி செய்யும் குடிகள் 18 வகுப்பாளர்கள் .அவர்களில் கம்மாளர் 5 பிரிவுகளும் அடங்கியுள்ளனர் . அராஜக காலத்தில் கம்மியர்கள் தங்கள் எஜமானர்களாகிய வேளாளர்கள் கட்டளைகளை மீறியதால் வழக்கு நேர்ந்தது .

06.07.1819 ஆம் ஆண்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி துக்கடி , கஸ்பா , முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வலங்கை இடங்கை கலகங்கள் நடைப்பெற்றன ,

1844 வது ஆண்டில் சிதம்பரம் நகரத்தில் வன்னியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நடைபெற்றது பெரும் கலகம். மேற்ப்படி சிதம்பரம் பகுதியில் கலகங்கள் பரவின .

இதைப்பற்றி நாம் இப்போது தெளிவாக பார்ப்போம் .

1844 வது ஆண்டில் சிதம்பரம் நகரத்தில் வன்னியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நடைபெற்ற கலகம் ஒரு பெரும் யுத்தத்தை போல நடந்தது . பல உயிர்சேதங்கள் நிகழ்ந்தன . இடையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறுக்கிட்டு இரு தரப்பாரையும் சமாதானபடுத்தியுள்ளனர் .

1844 வது ஆண்டில் தில்லைவாழ் நடராஜர் வசிக்கும் சிதம்பரம் நகரத்தில் கைகோளர் எனப்படும் செங்குந்தர் வகுப்பில் , ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது . அவருடைய பெயர் சரவணா முதலி . அன்னவருடைய திருமண ஊர்வலம் பல வீதிகளை கடந்து வெள்ளாளர் வாழும் வீதிக்கு வரும்பொழுது , இதை வெள்ளாளர்கள் ஆட்சேபித்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தனர் . வீண் சண்டைக்கு நின்றனர் .

நீதிக்காக வன்னியர்கள் செங்குந்தர்களுக்கு உதவி செய்தனர் :

பிற்ப்படுத்தப்பட்ட சமூகமான செங்குந்தர்கள் , இதை பஞ்சாயாத்தாரிடம் முறையிட்டனர் . பஞ்சாயத்து தலைவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்த "குப்பு நாயகர் " அவர்கள் . இதை ஆலோசிக்க சபையை கூட்டினார் . முடிவில் வேளாளர் செய்தது தவறு என்று சபையினர் முடிவு செய்து , வெள்ளாளர் செய்கையை கண்டித்தனர் .

இதனால் வெள்ளாளர்களுக்கு ஆத்திரம் அதிகம் ஆயிற்று . இவர்கள் மீண்டும் செங்குந்தர் வீடுகளையும், அவர்களுக்கு பரிந்து பேசிய வன்னியர் வீடுகளையும் தாக்க முனைந்தனர் . வெள்ளாளர் கொடுமைகள் எல்லை மீறி சென்றது .

இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள வன்னியர் பலர் , சோழ பரம்பரையின் பிற்கால வம்சத்தை சேர்ந்த மன்னனும் ,வன்னியகுல திலக மணியுமான பிச்சாவரம் மன்னரிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, இவ்விஷயத்தில் அவரை தலையிட்டு உதவிட கோரினர் .

இந்நிகழ்வை கேள்வியுற்ற அரசர் கடும் கோவமுற்றார். உடனே சிதம்பரம் அடுத்த திருபோர்களம் என்னும் ஊரில் உடனே ஒரு வன்னியர் மாநாட்டை கூட்டினார் .

வன்னியர் படை திரண்டனர் ..ஒன்று கூடி பேசினர் . முதலில் நீதி கேட்பது ! மறுப்பின் போராடுவது என்று முடிவு செய்தனர் .

இதற்க்கு "வடமலை " என்ற வன்னிய வீரனிடம் பொறுப்பை ஒப்படைத்தனர் . வடமலை தலைமையில் வெள்ளாளர் இருக்கும் திசை நோக்கி வன்னியர்கள் சென்றனர் .

இதை அறிந்த வெள்ளாளர்கள் சூழ்ச்சியை கையாள முற்ப்பட்டனர் ..

வெள்ளாளர் சூழ்ச்சி :

தளபதியான வடமலையிடம் தாங்கள் சமாதானம் பேச விரும்புவதாகவும் , ஆகவே பொன்னம்பலன் என்பவர் இல்லத்தில் விருந்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர் .இதை ஏற்ற வடமலை அவர்கள் விருந்துக்கு சென்றார் ..அங்கே திரைமறைவில் சதி வேலை நடந்தது .. விருந்திற்கு வந்த வடமலையை வெள்ளாளர்கள் ஆதி திராவிட உதவியுடன் கொலை செய்தனர் .

இச்சேதியை கேள்வியுற்ற பிச்சாவரம் சோழகனார் , சினம் கொண்டார் .. உடனடியாக சிதம்பரம் வந்தார் . சுற்றுபுறத்தில் உள்ள தங்கள் குலத்தவர்களை அழைத்தார் .. சுமார் 6000 பேர் ஒன்று கூடினர் .. வடமலையை கொன்ற வெள்ளாளர்கள் மற்றும் ஆதி திராவிடர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குங்கள் ... அவர்களின் திமிரும் ஆணவமும் இன்றோடு அழியட்டும் என்றார் .

இதற்க்கு தலைவனாக வன்னியர் பூங்காவனம் அவர்களும், துணை தலைவராக வன்னியர் சமூகத்து ராமசாமி அவர்களும் தலைமை ஏற்று யுத்தத்தை மேற்கொள்ள ஆயுத்தமானார் ..

இச்சமயத்தில் சிதம்பரம் தாசில்தார் ரெங்க ராயர் பிச்சாவரம் மன்னரை கண்டார் .எதிரி தரப்பையும் கண்டு பேசினார் .. சமாதானம் ஏற்ப்படவில்லை .

முடிவில் தன்னிடம் உள்ள காவல்துறையை கொண்டு கஜானாவிற்கு காவல் போட்டார் .அரசாங்க கட்டிடங்களும் பொருள்களும் சேதம் வராத வண்ணம் காவல்துறையை காவலுக்கு போட்டார் . கலவரத்தை தடுக்க காவல்துறை இல்லாததால் , தனது மேல் அதிகாரியான கலெக்டர் அர்ஜி அவர்களுக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதற்குள் யுத்தம் மூண்டது .. எதிரிகளின் அனேக வீடுகள் இடிக்க பட்டன .பல உயிர் சேதம் நிகழ்ந்தது . வெள்ளாளர்கள் தோற்று ஓடினர் ..
ஆணவத்தை அழித்த பிச்சாவரம் மன்னர் தங்கள் குல கொடியான புலி கொடியை பறக்க விட்டார் .

இதன்மூலம் செங்குந்தர்கள் , வன்னியர்களுக்கும் பிச்சாவரம் மன்னருக்கும் நன்றி தெரிவித்தனர் ..

இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது :

1. வன்னியராகிய நாம் நமது முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாது , ஏனைய பிற்ப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும் இன்று பாடுபடுவது போலதான் சென்ற காலத்திலும் நம் முன்னோர்கள் பாடுபட்டுள்ளனர் .

2. வன்னியர் அக்காலத்திலும் நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டுதான் எப்போதும் வாழ்ந்து வந்துள்ளனர் .

3. வன்னியர் தங்களை பிறர் இழிவுபடுத்தியதை தடுக்க தங்கள் உயிரையும் கொடுத்து போராடியுள்ளனர் .

என்பதை நாம் நினைவில் கொள்வோம் .

ஆண்ட பரம்பரை
பல்லவ நாடு இதழ் ஆசிரியர்
வ.செயச்சந்திரன் .

(கந்தசாமி கண்டர் வரலாறு நூல் : பக்கம் - 232)
-நன்றி வசந்த ராஜ படையாட்சியார்

வன்னியர்களுக்கு பிராமணர் வெற்றி தேடி தந்த வழக்கு

வன்னியர்களுக்கு பிராமணர் வெற்றி தேடி தந்த வழக்கு :

=======================

முதற் குலோத்துங்க சோழன் காலச் சாசனம் இடங்கை வலங்கை கலகமொன்று ராஜமகேந்திரர் சதுர்வேதி மங்கலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இடங்கை வலங்கையர் மோதல்கள் :

வலங்கை இடங்கை என்ற பிரிவு தென்னகத்தில் தோன்றியது .

வன்னியர்களும் பார்ப்பனர்களும் அக்கட்சிகளில் கலக்காமல் நடுநிலைமை வகித்தனர் .ஆனால் பலமுள்ள வலங்கை வகுப்பார்கள் இடங்கைலார்களை அழிக்க ஆரம்பித்த காலத்தில் , இடங்கை சாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வீரமும் ஆண்மையும் உள்ள வன்னியர்கள் வலங்கையாளர்களை அடக்கி , இடங்கையாளர்களை காப்பாற்றினர் .


சேலம் வன்னியர் வெற்றி பெற்ற வழக்கு விவரம் :
==================================

கிபி 1633 இல் இன்றைய சேலம் சேரநாட்டுத் திருமணி முத்தாறு சூழ இருந்தது .

சேலம் பகுதியில் வலங்கை இடங்கையினர் என இரு பிரிவுகள் இருந்தன . இடங்கை எட்டு பிரிவினர் , வலங்கையினர் பத்து பிரிவினர் .

இடங்கையினரை விட வலங்கையினர் தங்களை உயர்தரப் பிரிவினராக எண்ணிகொண்டவர்கள்..

சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ 108 ஊர்களிலும் இருந்த இடங்கையர் (பன்னாட்டார் - பல நாட்டுத் தலைவர்கள் - இன்றும் நாட்டார் , நாட்டாண்மை என்று இவர்கள் வழங்க பெறுகின்றனர் ) வெகுண்டு எழுந்து வலங்கையினர் மீது வழக்கு தொடுத்தனர் .

அப்போது அரசராக இருந்தவர் கம்பலராசேசுவரன் வேங்கடபதி நாயக்கரும், தளபதி பெத்தண்ண நாயக்கரும் நடுவர்களாக இருந்து வழக்கை ஆராய்ந்தனர் .

இரு தரப்பினரின் புராணக்கதைகள் , வரலாறுகள் , வேள்வி முறைகள் அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன .

இடங்கையர் சார்பில் நான்கு வேதங்களும் இதிகாச புராணங்களும், வைத்திய சாஸ்த்திரங்களும் கற்று தேர்ந்த ஹாரித கோத்திரம் , ஆஸ்வலனாய சூத்த்ராதிகாரர் , இறவாச நல்லூர் இராசநாராயணப் பெருமாளை வணங்கி வாழ்ந்த இராசநாராயணய்யர் அவர்கள் வாதாடி வழக்கில் வன்னியர்களுக்கு வெற்றி பெற்று தந்தார் .

அதனால் இராசநாராயணய்யர் அவர்களை தங்கள் குல குருவாகவும் , தந்தையாராகவும் அவர் தங்கள் குல தெய்வமான சம்பு மகரிஷியின் இரண்டாவது அவதாரமாகவும் பன்னாட்டைச் சார்ந்த வன்னியர்களும் மனமார ஏற்று கொண்டு பல்வேறு சிறப்புகளை செய்து வந்தனர் .

பன்னாட்டு வன்னிய தலைவர்களும் எழுதி கொடுத்த அந்த செப்பேட்டை இன்றும் பாதுகாத்து வைத்திருந்து உதவிய திருவாளர். திரு. என்.எஸ். பெரியசாமி அய்யர் அவர்களை இதயங்கனிந்து போற்றுவோம் .

நூல் : கந்தசாமி கண்டர் வரலாறு
பக்கம் : 217

Friday, 19 July 2013

"பள்ளி" வார்த்தை பற்றிய ஒரு விளக்கம்

தமிழ்'ல் பல இலக்கியங்களிலும்,வரலாறுகளிலும் பள்ளி என்ற வார்த்தை உயர்வையும் மேன்மையையும் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது, இன்றும் அவ்வாறு தன உள்ளது ..அதன் விளக்கத்தை இங்க காண்போம் .


பள்ளி என்பது உண்மையில் ஒரு சமண (புத்த) சமுதாய வார்த்தை ..சமண கோவில்கள் அனைத்தும் பள்ளி என்றே அழைக்கப்பட்டது ...தென் இந்தியாவில்  புத்த மதத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள் பல்லவர் வம்சம் தான் புத்த வர்மன், பொதி தர்மன் போன்ற மன்னர்கள் இதற்கு சாட்சி .

ஆகவே அவர்களின் (பல்லவர்களின்) வழிதோன்றல்கள் ஆகிய இன்றைய வன்னியர்க்கும் பள்ளியர் அல்லது பள்ளி சமுதாயம்  என்ற பெயர் வந்தது ..

அரசனின் நினைவிடத்தை (நடுகல்)  பள்ளிப்படை  என்றே அழைப்பார்கள்
(ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குடந்தை அருகே உள்ள
 பழையாறை'யில் உள்ளது)

=================================================================
பள்ளி என்ற சொல் இன்றும் உபயோகிகப்படும் இடங்கள்...
======================================================
1)பள்ளிக்கூடம்--> சங்கம் காலம் தொட்டு இன்று வரை கல்வி கற்பிக்க படும்        இடம் பள்ளி என்றே அழைக்கபடுகிறது

2)பள்ளிவாசல் -->இஸ்லாமியர்களின் கோவில்'கள் அனைத்தும் இன்று பள்ளிவாசல் என்றே அழைக்கபடுகிறது

3)பள்ளி அரை  ---->ஹிந்து ஆலயங்களில் பிரதான கடவுள் இருக்கும் அறை இன்றும் பள்ளியறை என்றே அழைக்கபடுகிறது

4)பள்ளி கொள்ளுதல் ---->ஆழந்த துயில்(தூக்கம் ) அல்லது தியானம் இருக்கும் நிலையை பள்ளி கொள்ளுதல் என்பார்கள்..

5)பள்ளி கொண்ட பெருமாள் ---> பெருமாள் சாய்ந்த கோணத்தில் படுத்திருப்பது போல காட்சி அளிப்பதை பள்ளி கொண்ட பெருமாள் என்று தான் அழைப்பார்கள் ...மற்ற பெருமாள் கோலத்தை விட இது தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது ....
==============================================================
பள்ளி என்ற பெயர் உடைய மற்ற சமுதயாங்கள்
===============================================================
1)இல்லத்து பிள்ளைமார் சமதாயத்தில் 5 இல்லங்கள் உள்ளது  அவற்றுள்
பள்ளி இல்லம் எனும் பிரிவே மிகவும் உயர்ந்தது

2)பள்ளி ரெட்டி ,பள்ளி காப்பு ,பள்ளி நாயர் போன்றவை மற்ற சமுதாயங்களில் உள்ள பள்ளி என்றுள்ள பிரிவுகள் ஆகும் 

Wednesday, 17 July 2013

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆண்ட பாளையங்களும் அவர்களின் பட்டங்களும் ...

1. பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப சோழனார்.
2. முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்)
3. அரியலூர் – மழவராயர்
4. உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.
5. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
6. கீழூர் - பாஷா நயினார்
7. சிவகிரி - பாண்டிய வன்னியனார்
8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைகண்டியத் தேவர்.
9.அளகாபுரி – ரெட்டைக்குடையார்
10. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
11. குன்ணத்தூர் – மழவராயர்
12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
13. பிராஞ்ச்சேரி - நயினார்
14. தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
15. நெடும்பூர் – வண்ணமுடையார்
16. கடம்பூர் – உடையார்
17.ஓமாம்புலியூர் – வண்ணமுடையார்
18. குண வாசல் – வண்ணமுடையார், உடையார்
19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
20. நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர்
21. கிளாங்காடு - சேதுவராயர்
22. கல்லை – நயினார்
23. நயினார் குப்பம் - காங்கேய நயினார்
24. திருக்கணங்கூர் - கச்சிராயர்
25. தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர்
26. ஆடூர் - நயினார்
27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
28. சோழங்குணம் – முதன்மையார்
29. வடக்குத்து - சமஷ்டியார்
30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
33.முடிகொண்ட நல்லூர் – உடையார்
34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
36. கு றிச்சி - உடையார்
37. செல்லப்பன் பேட்டை – சோழனார்
38. சோத்தமங்கலம் - வாண்டையார்
39. கோடாங்க்குடி – சம்புவராயர்
40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்
41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
42. இடைமணல் – நயினார்
43. சுவாமிமலை – தொண்டைமான்
44. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.
45. விளந்தை – வாண்டையார், கச்சிராயர்
46. பெண்ணாடாம் – கடந்தையார்
47. விடால் – நாயக்கர்
48. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
49. கருப்பூர் - மழவராயர்
50. கார்க்குடி – மழவராயர்

வன்னிய பாளையக்காரர் சிலர் இனைந்து எடுத்த அறிய புகைப்படம்

நுராண்டுகளுக்கு முன் உடையார்பாளையம் பாளையக்காரர், அரியலூர் மழவராயர், பிச்சாவரம் சோழனார், கடலங்குடி ஜமின், வடுககுடி ஜமீன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த அறிய புகைப்படம்

இடம் : உடையார்பாளையம் ஜமின் அரண்மனை

Monday, 15 July 2013

வன்னியர்களுக்கு உண்டான பட்டங்கும், உட்பிரிவுகளும் ..

பிரிவுகள்
வன்னியர், படையாட்சி, பள்ளி, கௌண்டர், நாயக்கர்/நாயகர், கண்டர், ரெட்டி(திருவள்ளுவர் மாவட்டம்)

பட்டங்கள்/விருதுகள்
காடுவெட்டியார்(pallavar), காடவராயர்(pallavar), சம்புவராயர், தொண்டைமான், மழவராயர், மலையமான், வாண்டையார், வல்லவராயர், பல்லவராயர், படையாண்டவர், பிள்ளை, முதலியார், தேவர், கண்டியதேவர், நாட்டார், நாயனார்,ராவுத்த மீண்ட நாயினார், கச்சிராயர்,கௌடா (tigaluru-karnataka), உடையார், காலிங்கராயர், சோழனார்(சோழர்), சோழகனார்(சோழர்), செம்பியனார்(சோழர்),பல்லவ நாயகர், ராயர், ராஜகாளியர், ராஜாளியார், கங்கன உடையார், வானத்திராயர், வானவர், கடாரம் காத்தவர், கம்புடையார், சுவாமி, சேரனார், பாண்டியனார், பரமேஸ்வரனார், உரையார், வருமாராயர், முப்பனார், வையவர், வேலி, தென்னவராயர், கண்டவராதித்தர், மானம் காத்த மழவராயர், வாலன்டையார், இறையவர், நீலாங்கரயார், அதியமான்,ஜெயங்கொண்டார், மாமுனைகாரர், கொண்டார், அன்னாலங்கார், ராவுதமீண்டார், காசிராயர், உலகுடையார், சாமந்தர், செட்டியார், மேச்த்ரி, பட்டவர்த்தி, பல்லவர், புலிகுத்தியார், மருந்கிர்பிரியர், முதன்மையார், வணங்காமுடியார், வன்னியனார், வீரமீண்டார், பாளையக்காரர், மந்திரியார், தொண்டனார், நன்மையார், விள்ளகொண்டார், சமுதிராயர், ஏன்தனர், உய்யக்கொண்டார், ஆவியார், இச்சதிரியர், நாயக்கர், இரட்டியர், ராஜா, காசுடையார், கடந்தையார், கனடியர், கொண்டீகர், காவுண்டர், சம்ச்க்ஷியார், சாமதியார், சேதுராயர், நீலாங்கராயர், பண்டாரத்தார், பல்லவராயர், பூபதி, மழவர், முனையதரையர், வர்மா, வில்லவர், மும்முடி சோழகனார், துரை, பூமி கொடையார், வாளோடு பிறந்தவர், வல்லமை உடையார், பாண்டியனார், உத்தம சோழகர், ஜெயபுளியார், ஏசிகர், வீரன்கரயார்,நீலம்பிரியர், கோட்டை உண்டார்,வல்லதிரயார், கட்டரியார், வில் விஜயனார் ,காங்கேயர், தொண்டமார், கலிங்கராயர், வன்னிய பிள்ளை, நாயகம்,....