Sunday, 12 January 2014

வன்னியர்களுக்கு பிராமணர் வெற்றி தேடி தந்த வழக்கு

வன்னியர்களுக்கு பிராமணர் வெற்றி தேடி தந்த வழக்கு :

=======================

முதற் குலோத்துங்க சோழன் காலச் சாசனம் இடங்கை வலங்கை கலகமொன்று ராஜமகேந்திரர் சதுர்வேதி மங்கலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இடங்கை வலங்கையர் மோதல்கள் :

வலங்கை இடங்கை என்ற பிரிவு தென்னகத்தில் தோன்றியது .

வன்னியர்களும் பார்ப்பனர்களும் அக்கட்சிகளில் கலக்காமல் நடுநிலைமை வகித்தனர் .ஆனால் பலமுள்ள வலங்கை வகுப்பார்கள் இடங்கைலார்களை அழிக்க ஆரம்பித்த காலத்தில் , இடங்கை சாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வீரமும் ஆண்மையும் உள்ள வன்னியர்கள் வலங்கையாளர்களை அடக்கி , இடங்கையாளர்களை காப்பாற்றினர் .


சேலம் வன்னியர் வெற்றி பெற்ற வழக்கு விவரம் :
==================================

கிபி 1633 இல் இன்றைய சேலம் சேரநாட்டுத் திருமணி முத்தாறு சூழ இருந்தது .

சேலம் பகுதியில் வலங்கை இடங்கையினர் என இரு பிரிவுகள் இருந்தன . இடங்கை எட்டு பிரிவினர் , வலங்கையினர் பத்து பிரிவினர் .

இடங்கையினரை விட வலங்கையினர் தங்களை உயர்தரப் பிரிவினராக எண்ணிகொண்டவர்கள்..

சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ 108 ஊர்களிலும் இருந்த இடங்கையர் (பன்னாட்டார் - பல நாட்டுத் தலைவர்கள் - இன்றும் நாட்டார் , நாட்டாண்மை என்று இவர்கள் வழங்க பெறுகின்றனர் ) வெகுண்டு எழுந்து வலங்கையினர் மீது வழக்கு தொடுத்தனர் .

அப்போது அரசராக இருந்தவர் கம்பலராசேசுவரன் வேங்கடபதி நாயக்கரும், தளபதி பெத்தண்ண நாயக்கரும் நடுவர்களாக இருந்து வழக்கை ஆராய்ந்தனர் .

இரு தரப்பினரின் புராணக்கதைகள் , வரலாறுகள் , வேள்வி முறைகள் அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன .

இடங்கையர் சார்பில் நான்கு வேதங்களும் இதிகாச புராணங்களும், வைத்திய சாஸ்த்திரங்களும் கற்று தேர்ந்த ஹாரித கோத்திரம் , ஆஸ்வலனாய சூத்த்ராதிகாரர் , இறவாச நல்லூர் இராசநாராயணப் பெருமாளை வணங்கி வாழ்ந்த இராசநாராயணய்யர் அவர்கள் வாதாடி வழக்கில் வன்னியர்களுக்கு வெற்றி பெற்று தந்தார் .

அதனால் இராசநாராயணய்யர் அவர்களை தங்கள் குல குருவாகவும் , தந்தையாராகவும் அவர் தங்கள் குல தெய்வமான சம்பு மகரிஷியின் இரண்டாவது அவதாரமாகவும் பன்னாட்டைச் சார்ந்த வன்னியர்களும் மனமார ஏற்று கொண்டு பல்வேறு சிறப்புகளை செய்து வந்தனர் .

பன்னாட்டு வன்னிய தலைவர்களும் எழுதி கொடுத்த அந்த செப்பேட்டை இன்றும் பாதுகாத்து வைத்திருந்து உதவிய திருவாளர். திரு. என்.எஸ். பெரியசாமி அய்யர் அவர்களை இதயங்கனிந்து போற்றுவோம் .

நூல் : கந்தசாமி கண்டர் வரலாறு
பக்கம் : 217

No comments:

Post a Comment